Written on 12:09 AM by பூபாலன்(BOOBALAN)
இந்தியாவைச் சேர்ந்த இந்த இளம் பெண் ஒறு அடி, 11 அங்குலம் (58cm) மற்றுமே உயரமுடயவர். 14 வயதுடைய இந்த Jyoti Amge என்கிறவர் இரண்டு வயது குழந்தையை விடவும் சிரியவராவர். மேலும் அவரது இடை 11lb/ 5kg ஆகக் காணப் படுகிறது.
அவருக்கு achondroplasia என்ற பிரச்சினை இருப்பதால் இதற்கு மேல் வளர வாய்ப்பில்லை எனக் கருதப் படுகிறது.
|
Written on 11:15 PM by பூபாலன்(BOOBALAN)
காஞ்சி சங்கர மடம் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்காக ரூ.2-1/2 கோடியில் தயாரிக்கப்பட்ட தங்க கிரீடத்தை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காணிக்கையாக வழங்குகிறார்.
இது குறித்து காஞ்சி சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் நிருபர்களிடம் கூறியதாவது:-
|
Written on 10:56 PM by பூபாலன்(BOOBALAN)
போலி சாமியார்கள் சொல்வதை கேட்டு ஏதேதோ செய்து ஏமாறுவோர் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் சாமியார் பேச்சை கேட்டு ஒரு பெண், பக்கத்து வீட்டு குழந்தையின் நாக்கை அறுத்துள்ளார்.இந்த திடுக்கிடும் சம்பவம் வருமாறு; உ.பி.யில் மகாராஜ்கன்ச் மாவட்டத்தில் சிஸ்வான் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் மஞ்சுதேவி(35) என்பவரின் வீட்டுக்கு ஒரு போலி சாமியார் அடிக்கடி வந்து நிறைய ‘கதை’ விட்டுள்ளார். அதில் சில விஷயங்கள் நடந்திருக்கிறது. அதனால், அவர் சொல்வதை அப்படியே கேட்டுள்ளார் மஞ்சுதேவி.
கடந்த புதனன்று, சாமியார் வந்த போது, பக்கத்து வீட்டில் வசிப்பவரின் 4 மாத பெண் குழந்தையை மஞ்சுதேவி கொஞ்சிக் கொண்டிருந்தார். குழந்தையை பார்த்த சாமியார், ‘இந்த குழந்தைக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கிறது. இதன் நாக்கை கொஞ்சம் வெட்டி விட்டால், பிற்காலத்தில் இந்த பெண் செல்வ செழிப்புடன் வாழும்’ என்று கூறியிருக்கிறார்.
இதை கேட்ட மஞ்சுதேவி, பக்கத்து வீட்டுக் குழந்தை என்று கூட பார்க்காமல், கத்தி எடுத்து குழந்தையின் நாக்கை வெட்டி எடுத்து விட்டார். குழந்தையின் அலறல் சத்தம் அதிகமாகவே பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்துள்ளார்.
பயந்து போன மஞ்சுதேவி குழந்தையை அடுப்பங்கரையில் போட்டு விட்டு ஓடி விட்டார். போலி சாமியார் அதற்கு முன்பே எஸ்கேப்...
குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ‘குழந்தை இன்னும் அபாய கட்டத்தில்தான் உள்ளது. மஞ்சுதேவியைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்’ என்று மகாராஜ்கன்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தி நேற்று தெரிவித்தார்.
|
Written on 10:47 PM by பூபாலன்(BOOBALAN)
சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை செயற்கைக்கோள்கள் மூலம் சூரியனின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கண்காணித்தும் எடுக்கப்பட்ட படங்கள் மூலமாகவும் இது தெரியவந்துள்ளது.
|
Written on 10:46 PM by பூபாலன்(BOOBALAN)
நமது சூரிய குடும்பத்தை போல ஏராளமான சூரிய குடும்பங்கள் வான வீதியில் உள்ளன. அதில் கிரிசி-581 என்ற சூரிய குடும்பம் 11 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு அப்பால் உள்ளது.
|
Written on 10:45 PM by பூபாலன்(BOOBALAN)
லண்டன்: காலநிலை மாற்ற்த்தின் பின்னணியில் புவிவெப்பமடைந்து வந்தாலும் அதிகரித்து வரும் சூரியனின் வெப்ப ஒளிக்கற்றைகள், செயல்பாடுகளால் உண்மையில் பூமி குளிர்ச்சி அடைய செய்வதாக புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.வளர்ந்து வரும் நாடுகளில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவினால் நாளுக்கு நாள் புவி வெப்பம் அடைந்து வருகிறது.
|
Written on 10:45 PM by பூபாலன்(BOOBALAN)
மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயில் என்ஜினை சீன என்ஜினீயர்கள் உருவாக்கி வருகிறார்கள். அதி வேக ரெயில் கட்டுமானத்தில் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்க நாங்கள் விரும்புகிறோம் என்று ரெயில்வே அமைச்சரக தலைமை என்ஜினீயர் ஹெ ஹூவாவூ தெரிவித்தார். மணிக்கு 394.3 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயிலை பீஜிங்குக்கும், டியான்ஜின் நகருக்கும் இடையே சீனா அறிமுகப்படுத்தி 2008-ம் ஆண்டு ஜுன் 24-ந் தேதி சீனா உலக சாதனை படைத்தது.
|