**HI**FRIENDS**WELCOME TO MY BLOG**

ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள..,சி.பி.ஐ.,விசாரணை முடிந்து சென்னை திரும்புகிறார்

Written on 10:54 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_154864.jpg 
சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணை முடித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மதியம் 1 மணி அளவில் சென்னை வருகிறார். முதல்வர் கருணாதியின் தோள்கொடுக்கும் உற்றவராக இருந்த ராஜா தற்போது முறைகேட்டில் சிக்கி தனது தலைவரிடம் இருந்த முக்கியத்துவத்தை இழந்துள்ளார்.

நாடு அளவில் பெரும் எதிர்ப்பு கிளப்பிய எதிர்கட்சிகளின் பிரசாரத்துக்கு தி.மு.க., வினால் ஈடு கொடுக்க முடியாமல் போனது என்பதுதான் <உண்மை. இதற்கு ஒரு சான்றாக பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் முழுமையாக முடங்கிப்போனது.

இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று இதன் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டின் அதிரடி கேள்விகளால் சி.பி.ஐ., தனது பணியை வேகப்படுத்தியது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா, நீரா ராடியா மற்றும் முக்கியஸ்தர்கள் உறவினர்கள் என பலரது அலுவலகம், வீடுகளில் ரெய்டு நடத்தினர். இதில் முக்கிய ஆவணஙகள் சிக்கியதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் நீரா ராடியாவுடன் நேரடி விசாரணை நடத்தியிருக்கிறது. ராஜாவிடம் மட்டும் 2 நாள் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 2 நாள் விசாரணையை முடித்து அவர் சென்னை திரும்புகிறார்.காலை11 மணி அளவில் வருவார் என முதலில் கசிந்தது, தற்போது மதியம் 1 மணி அளவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.விசாரணை குறித்து இது வரை நிருபர்களிடம் கருத்து எதுவும் தெரிவிக்காத ராஜா இன்று ஏதும் சொல்வார் என தெரிகிறது. ராஜாவிடம் மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என்றும் டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் மாற்றம்: ஜெயலலிதா நடவடிக்கை

Written on 4:45 AM by பூபாலன்(BOOBALAN)





 
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
 
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பொறுப்பில் இருக்கும் பி.கிருஷ்ணன், செயலாளர் பொறுப்பில் இருக்கும் குப்புசாமி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
 
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி மாவட்ட துணை தலைவராக பி.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக டி.ஆர். அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
 
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.வி. ராஜேந்திரன் ஆகியோரும் இன்றுமுதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
 
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி நியமிக்கப்படுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொறுப்பில் சி.வி. ராஜேந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் எழ முடியாத அளவு தி.மு.க.,விற்கு அடி :ஜெயலலிதா

Written on 11:32 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_152484.jpg 

சென்னை : ""அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடைபெறும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். இந்த முறை நம்முடைய தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும். எதிரி மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு நம்முடைய அடி மரண அடியாக இருக்க வேண்டும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா ஆவேசத்துடன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 23ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று காலை மலர் அஞ்சலி செலுத்தினார். இதில், ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில், ஜெயலலிதா பேசியதாவது:மறைந்த பின்னரும் மறக்க முடியாத மாமனிதராய், தமிழக மக்கள் நினைவில் நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் நினைவு நாளன்று ஒவ்வொரு ஆண்டும் நாம் இங்கு கூடி வருகிறோம். இந்த முறை விரைவில் தமிழக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில் நாம் இங்கே குழுமியிருக்கிறோம்.கருணாநிதியை அரசியலிலிருந்து ஒழித்துக் கட்ட அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., நிறுவினார். எம்.ஜி.ஆரால், சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதை கேலியும், கிண்டலும் செய்தார் கருணாநிதி. அத்திட்டத்தை கருணாநிதியால் இன்று வரை தவிர்க்க முடியவில்லை.அதேபோல, நான் கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தையும், இலவச பாடநூல் திட்டத்தையும் கருணாநிதியால் இன்று வரை தவிர்க்க முடியவில்லை.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல இலவச திட்டங்களை அறிவித்து மைனாரிட்டி அரசை அமைத்தார் கருணாநிதி. "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என நான் அறிவித்தேன். கருணாநிதி, "எங்கும் ஊழல், எதிலும் ஊழல்' என அதை மாற்றிவிட்டார். இந்த ஆட்சி ஆறரை கோடி தமிழக மக்களுக்காக நடக்கும் ஆட்சியா? அல்லது பரந்து விரிந்த கருணாநிதியின் குடும்பத்திற்காக நடக்கும் ஆட்சியா? என மக்கள் கேட்கும் அளவு ஒரு அலங்கோல ஊழல் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடக்கிறது. ஆறரைக் கோடி மக்களை வேதனையில் தள்ளி, ஒரு குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, மணல், கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை, நில அபகரிப்பு, திரைப்படத் துறையை கபளீகரம் செய்தது, சட்டம் ஒழுங்கு சீரழிவு, கொலை, கொள்ளையர்களுக்கு துணை போவது என சகலவித மக்கள் விரோத நடவடிக்கைகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.பத்திரிகைகள், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் "2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஈடுபாடு குறித்து வெளிச்சம்போட்டு காட்டியுள்ளன.

இதன்மூலம், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் தலைகுனிவை ராஜா மூலம் ஏற்படுத்தியுள்ளார் கருணாநிதி.அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் நடக்கும் யுத்தம், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம். எம்.ஜி.ஆர்., தீயதியை மூன்று முறை வீழ்த்தி ஆட்சி அமைத்தார். நான் இரண்டு முறை அதே தீயதியை வீழ்த்தி ஆட்சியமைத்தேன்.தீயதியை நிரந்தரமாக அரசியலில் இருந்து, இதுவரை அகற்ற முடியவில்லை. எதிரிகளை தாக்குவதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. லேசாக தாக்கினால் தள்ளாடுவர். சற்று பலமாக தாக்கினால், கீழே விழுந்து விடுவர்; ஆனால், மீண்டும் எழுந்து விடுவர்.

இந்த முறை நமது தாக்குதல் வலுவாக இருக்க வேண்டும். எதிரி மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவிற்கு நமது அடி மரண அடியாக இருக்க வேண்டும்.வரும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைக்கப் போவது உறுதி. அந்த அளவிற்கு தி.மு.க., மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் துணிவோடு பணியாற்ற வேண்டும். நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. உங்களுக்கு வழிகாட்டியாக உங்களுக்கு முன்னால் நான் செல்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பொன்னையன் உறுதிமொழிவாசகங்களை வாசிக்க, திரண்டிருந்த கட்சியினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்

Written on 4:44 AM by பூபாலன்(BOOBALAN)


 

""தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்; அதற்கு கிராம அளவில் காங்கிரசை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் யோசனை தெரிவித்துள்ளார்.
http://img.dinamalar.com/data/large/large_151830.jpg  தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், நேற்று இரண்டாவது நாளாக திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய ஊர்களில் நடந்த இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் ராகுல் பேசியதாவது: காங்., பேரியக்கம், 125 ஆண்டு கால வரலாறு மிக்க மாபெரும் இயக்கம். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் காங்., ஆட்சியமைக்கும் வலுவான நிலையை ஏற்படுத்த வேண்டும். தன்னிச்சையாக அது அமையாமல், காங்., ஆட்சியை ஏற்படுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகம், இளைய தலைமுறையின் கைகளுக்கு வர வேண்டும். அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் நிச்சயம் ஏற்படும்.

தமிழகத்தில் இரண்டாம் நிலையில் காங்., இருப்பதை நான் விரும்பவில்லை. காங்., தலைமையில் முதல்வர் வர வேண்டும். தமிழக அரசியலில், சட்டசபை, லோக்சபா பொறுப்புகளில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், மிக முக்கியமான கிராமங்களில், ஊராட்சிகளில் நாம் கவனம் செலுத்த தவறிவிட்டோம். தமிழகத்தில் அனைத்து மக்களிடத்திலும், எல்லா இடங்களிலும் காங்கிரஸ் என்ற நிலையை ஏற்படுத்தினால், அதற்கேற்ப செயல்பட்டால் தான் ஆட்சிக்கு வர முடியும். கிராமப்புற மக்களுக்காக பாடுபட வேண்டும்; அவர்களின் பிரச்னைகளை கையில் எடுத்து போராட வேண்டும். அப்படிபட்ட நிலையில் மக்களின் ஆதரவை பெற்றால், ஆட்சிப் பொறுப்பை மற்ற யாராலும் வெல்ல முடியாது. அடுத்த கட்டமாக, ஊராட்சிகளில், வார்டுகளில் இளைஞர் காங்கிரசார் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஊராட்சிகளில் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும். அப்படிபட்டவர்களுக்கு சட்டசபை, லோக்சபா மற்றும் தமிழக அளவில் முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தருவது என் வேலை.

காந்திஜி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை நினைவு கூர்வது மட்டும் போதாது; அத்தலைவர்களின் கடமைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்தனர். நேற்றிரவு, கக்கன் வாழ்ந்த சிறிய வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவரது வாழ்க்கை வரலாறு தெரிந்தது. காமராஜர் பற்றி சினிமா, புத்தகத்தில் தான் அறிந்திருக்கிறோம். அந்த மாபெரும் தலைவர் இறந்தபோது, அவரிடம் 132 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அப்படிபட்ட தியாக வரலாறாக, அவர்களது வாழ்க்கை இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஊராட்சி பொறுப்புகளில் நாம் வெற்றி பெற்றால், அடுத்த கட்டமாக முதல்வர் பதவி நம்மை தேடி வரும். இக்கூட்டத்துக்கு பெண்கள் குறைவாக வந்துள்ளனர்; அடுத்த முறை பெண்கள் கூட்டம் சரி பாதியாக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார். இரண்டு நாட்களாக எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை, ஆறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் சந்தித்து பேசினார். நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றார். ராகுலின் இந்த இரண்டு நாள் பயணத்தால் தமிழக காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பேசும் படம்

Written on 10:08 PM by பூபாலன்(BOOBALAN)

வெங்காயத்தை இறக்குமதி செய்ய அவசரம் : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Written on 9:55 PM by பூபாலன்(BOOBALAN)

 

http://img.dinamalar.com/data/large/large_151192.jpgபுதுடில்லி : வெங்காயம் ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் இறக்குமதி மீதான வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், வெங்காயம் இறக்குமதிக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி மத்திய வர்த்தக அமைச்சகத்தையும், பதுக்கல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
வெங்காய விலை உயர்வு அதிகரித்தது பிரதமரையும், அரசையும் கவலையுறச் செய்ததால், இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது, மத்திய அரசை கவலை யடைய செய்துள்ளது.சென்னையிலும் கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்றது. இதனால், வெங்காய விலையை கட்டுப்படுத்த, விரைவாக நடவடிக்கைகளை எடுக்கும்படி, மத்திய விவசாய அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டு கொண்டார். அதே நேரத்தில், வெங்காயம் விலை உயர்வையடுத்து, அதன் ஏற்றுமதிக்கு முதலில் ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்டது.தற்போது இந்த தடை, மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெங்காயம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெங்காயம் இறக்குமதிக்கு இதுவரை 5 சதவீதம் சுங்கவரியும், 4 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரியானது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்க விதிக்கப்படுவது.வெங்காயம் இறக்குமதி மீதான இந்த இரண்டு வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இறக்குமதி அதிகரித்து உள்நாட்டில் விலை குறையும் என, மத்திய நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா கூறியுள்ளார்.


இதற்கிடையில், வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.மேலும், வெங்காய விலை குறைய இறக்குமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படியும், மத்திய வர்த்தக அமைச்சகத்தை கேபினட் செயலர் சந்திரசேகர் கேட்டு கொண்டுள்ளார். மத்திய அரசின் கீழ் உள்ள ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் போன்ற அமைப்புகள் இறக்குமதியில் தீவிர முனைப்பை காட்டும்.மேலும், உற்பத்தி செய்யப் படும் இடத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வெங்காயத்தை விரைவாக கொண்டு செல்ல, ரயில்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், ரயில்வே வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.


மத்திய அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாகவும், வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதாலும், மொத்த விலை குறைய துவங்கி விட்டது. நாட்டின் மிகப்பெரிய வெங்காய வர்த்தக மையமான நாசிக்கில், நேற்று வெங்காயத்தின் மொத்த விலை 42 சதவீதம் வரை குறைந்தது. டில்லியில் உள்ள சந்தைகளிலும் வெங்காயத்தின் மொத்த விலை 29 சதவீதம் வரை குறைந்தது.


நாசிக் வர்த்தக மையத்தில், நேற்று முன்தினம் ஒரு குவிண்டால் வெங்காயம் 5,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று 3,702 ரூபாயாக குறைந்தது. "புதிதாக விளைந்த வெங்காயமும் விரைவில் சந்தைக்கு வர உள்ளதால், அடுத்த ஏழு முதல் 10 நாட்களிலும் வெங்காயத்தின் சில்லறை விலை கணிசமாக குறையும்' என, மத்திய விவசாயத்துறை செயலர் பி.கே.பாசு கூறியுள்ளார்.வெங்காயத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் சில தென்மாநிலங்களில் அதிகளவு மழை பெய்து, பயிர்கள் பாதிக்கப்பட்டதே காரணம். அத்துடன் பதுக்கலும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பாக்., வெங்காயம்: வெங்காய இறக்குமதியை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லை வழியாக, 450 டன் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே 13 லாரிகளில் லாகூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வெங்காயம் பஞ்சாப் வந்தடைந்துள்ளது.வெங்காய ஏற்றுமதி மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், "தாமதமான நடவடிக்கை. கறுப்பு சந்தை பேர்வழிகளை சரியான நேரத்தில் ஒடுக்க மத்திய அரசு தவறி விட்டது' என்றார்.

டயர் வாங்கினால் வெங்காயம் இலவசம் : வெங்காய விலை மக்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ள நிலையில், ஜாம்ஜெட்பூரில் உள்ள டயர் விற்பனையாளர் ஒருவர், "தங்கள் கடையில் டயர் வாங்கினால், ஐந்து கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது லாரிக்கான டயர் வாங்கினால், ஐந்து கிலோ வெங்காயமும், காருக்கான டயர் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயமும் தரப்படும் என கூறியுள்ளார். சத்னாம்சிங் காம்பீர் என்ற பெயர் கொண்ட இவர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும், அகில இந்திய சீக்கிய மாணவர்கள் சம்மேளன தலைவராகவும் உள்ளார்.

தமிழுக்கு முன்னுரிமை: ஆங்கிலத்தில் உத்தரவு

Written on 11:09 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_150462.jpg

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு, ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க, அரசு சமீபத்தில் உத்தர விட்டுள்ளது. இதன்படி 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, செப்., 30 ல் அரசாணை வெளியிடப் பட்டது.ஆனால், இந்த உத்தரவு ஆங்கிலத்தில் உள்ளது. பல நூறு கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு, ஐகோர்ட்டில் தமிழ், தமிழ் வழி பொறியியல் படிப்பு... என, அரசு "எதிலும் தமிழ்' என்ற கொள்கையை புகுத்தி வருகிறது. ஆனால், அரசின் உத்தரவுகளில் இன்னும் ஆங்கில ஆதிக்கமே உள்ளது.

தமிழ் வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்; இதை பலர் பின்பற்றுவதில்லை; இவர்கள் மீது என்ன நடவடிக்கை? என்பது குறித்து, அரசு குறிப்பிடவில்லை. தமிழில் கையெழுத்திட நாங்கள் கூறும் அறிவுரைகளை, மற்ற துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவதில்லை,'' என்றார்.

கூட்டணி தொடருமா? காங்கிரஸ் மவுனம்

Written on 11:05 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_150470.jpgபுதுடில்லி :தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால், நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டில், கூட்டணி விவகாரம் பற்றி தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமல் மவுனம் சாதித்துள்ளது காங்கிரஸ் தலைமை.

நடந்து முடிந்த காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில், பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் தலைமை, கூட்டணி விவகாரம் குறித்து எவ்வித தீர்மானமும் நிறைவேற்றவில்லை.குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய தி.மு.க., மற்றும் அவ்விவகாரத்தில் பார்லி கூட்டுக் குழு விசாரணை கோரி வரும் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் பற்றி எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால் தான் கூட்டணிக் கட்சிகள் பற்றி கருத்து ஏதும் குறிப்பிடாமல் காங்கிரஸ் மவுனம் சாதிப்பதாகக் கூறப்படுகிறது.இவை தவிர, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் அடுத்தாண்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.

இது குறித்து மாநாட்டில் பேசிய சோனியா, "நாம் கூட்டணியில் இருக்கும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய நேரம் இது' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். உ.பி.,யைப் பொறுத்து தனித்துப் போட்டி என்று ஏற்கனவே பொதுச்செயலர் ராகுல் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசும் படம்

Written on 10:36 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/uploads/WR_388610.jpeghttp://img.dinamalar.com/data/uploads/WR_551290.jpeg

புத்தாண்டு முதல் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்கிறது

Written on 11:56 PM by பூபாலன்(BOOBALAN)




http://img.dinamalar.com/data/large/large_149927.jpg


சர்வதேச அளவில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்ததன் விளைவாக, சமையல் காஸ் சிலிண்டர் விலையை ஜனவரி மாதம் முதல் 22 ரூபாய் வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. நாளை நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பின், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தெற்காசிய நாடுகளில் இந்திய நுகர்வோர் தான் அதிகளவு எல்.பி.ஜி.,யை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். உள்நாட்டு தேவைக்காக, எண்ணெய் நிறுவனங்கள் ஆண்டுக்கு 30 லட்சம் டன் சமையல் காஸ் இறக்குமதி செய்கின்றன.
மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் ஒரு பிரிவான, பெட்ரோலிய திட்டமிடல் பகுப்பாய்வு குழு, 2010-2011ம் ஆண்டுக்கான எல்.பி.ஜி.,யின் தேவை ஒரு கோடியே 40 லட்சம் டன் என மதிப்பிட்டுள்ளது. எல்.பி.ஜி., இறக்குமதி ஆண்டுதோறும் 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.சர்வதேச அளவில் எல்.பி.ஜி., விலை ஆகஸ்டில் டன் ஒன்று 600 டாலருக்கு கீழே இருந்தது; தற்போது 1,000 டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஆகஸ்ட் மாதத்தை விட திரவ பெட்ரோலியம் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.



எண்ணெய் நிறுவனங்களுக்கு அமைச்சகம் வழங்கியுள்ள உத்தரவின் அடிப்படையில், கடந்த வாரம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. ஆனால், சமையல் காஸ் சிலிண்டர், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை ஏற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை.இதனால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை தவிர்க்க என்ன செய்யலாம் என்பது குறித்து, நாளை (22ம் தேதி) மத்திய அரசு முடிவு செய்யவுள்ளது.


"எண்ணெய் நிறுவனங்களுக்கு, எதிர்பார்த்ததை விட 65 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக' பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

இந்த இழப்பை சமாளிக்கவும், திடீரென எரிபொருள் விலை உயர்வை தடுக்கவும், இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிடவுள்ளது.அதோடு, சர்வதேச விலை உயர்வு மற்றும் குளிர்கால தேவையை சமாளிக்கும் வகையில், சமையல் காஸ் சிலிண்டரின் விலையை ஜனவரி 1 முதல் 367 ரூபாய் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சமையல் காஸ் சிலிண்டர் விலை 345 ரூபாயாக உள்ளது.நாளை கூடவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சமையல் காஸ் விலையை உயர்த்திக்கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சமையல் காஸ் மற்றும் டீசல் விலை உயர்வு நிச்சயம். ஆனால், எவ்வளவு உயரும் என்று சொல்ல முடியாது' என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜாவை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்

Written on 11:53 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_149925.jpg 
சென்னை : ""ராஜாவை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பின், அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளதே?

ராஜாவை கைது செய்ய வேண்டும்.

சட்டசபை தேர்தலுக்கு உங்கள் கட்சி கூட்டணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படும் போது உங்களிடம் தெரிவிப்பேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை: வழங்கினார் ஜெ., :கல்லூரி மாணவ, மாணவியருக்கு 13 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகையும், கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்ச ரூபாய் குடும்ப நல நிதியுதவியும் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.அண்ணா அறக்கட்டளை சார்பில், கட்சி தொண்டர்களுக்கு குடும்ப நல நிதி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று, அ.தி. மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, நேற்று மதியம் 1.05 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.மருத்துவம், இன்ஜினியரிங், நர்சிங், கலை மற்றும் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிலும் 41 மாணவ, மாணவியரின் கல்விக்கு தேவைப்படும் தொகையான 13 லட்சத்து 23 ஆயிரத்து 924 ரூபாய் மற்றும் 21 கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, குடும்ப நல நிதியுதவியாக ஜெயலலிதா வழங்கினார்.இந்நிகழ்ச்சி முடிந்ததும், கட்சி அலுவலகத்தில் திரளாக கூடியிருந்த தொண்டர்களுக்கு ஜெயலலிதா இரு கைகூப்பி வணக்கம் செலுத்தி விட்டு தனது காரில் கிளம்பினார். அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை மொத்தம் 822 ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு 3 கோடியே 69 லட்சத்து 25 ஆயிரத்து 695 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு சென்னை பல்கலையில் இடம் அளிக்க கூடாது.சீமான்

Written on 11:39 PM by பூபாலன்(BOOBALAN)


காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர், ராகுல் காந்தியின் தமிழக விஜயத்தின் போது, அவர் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில்கண்டனம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் வெளியிடப்பட்டள்ள அறிக்கையில்;
ராகுல் காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வரும் 22 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும்,தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திற்காகவும் வரும் சட்டமன்றத்தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசனை செய்யும் நோக்கத்துடன் அவரது பயணம் இருக்கும் என்றும் அவரது கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நிகழ்ச்சிக்கு பல்கலை அரங்கத்தை அனுமதிப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சென்னை பல்கலைக் கழகம் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனம் ஆகும்.ராகுல் காந்தி நிகழ்ச்சி நடைபெற்றால்,நிகழ்ச்சி தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஒட்டியும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வர்.காவல்துறையின் பலத்த கெடுபிடியும் பல்கலைக்கழகத்தில் இருக்கும்.இது அங்கு பயிலும் மாணவர்கள்,மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கும்.அவர்களின் அமைதியான கல்வி கற்கும் சூழலுக்கு தேவையற்ற இடையூறுகளும் ஏற்படும். இதனை அனுமதிக்க முடியாது.
மேலும் இதுவரை அங்கு எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றதில்லை.முதல்முறையாக ராகுல்காந்தியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் நிகழ்விற்கோ, ஆர்ப்பாட்டத்திற்கோ பொது இடங்களில் அனுமதி மறுக்கும் கருணாநிதியின் அரசும் கெடுபிடி செய்யும் காவல்துறையும் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் மாணவர்கள் படிக்கும் இடத்தில் அனுமதி அளிப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
இதனையும் மீறி ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தை பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதித்தால்,அதனைப்போல நாம் தமிழர் கட்சியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு வரும் 30 ஆம் தேதி அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.ராகுல் காந்திக்கு அனுமதி அளித்து எங்கள் நிகழ்ச்சிக்கு அனுமதியை நிர்வாகம் மறுத்தால் அனுமதி கோரி உயர்நீதிமன்றம் செல்வோம் என்பதையும் தெரிவிக்கின்றேன்

கொலை முயற்சி - ஆள் கடத்தல் வழக்கில் சமாஜ்வாடி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கைது

Written on 10:28 PM by பூபாலன்(BOOBALAN)



http://img.dinamalar.com/data/large/large_148939.jpgலக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதி அரசு எதிர்கட்சியினரை மிரட்டும் வகையில் முலாயம் சிங்கின் நெருங்கிய பிரமுகர்களான எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களை கைது செய்துள்ளது என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த கைது விவகாரம் மாநிலத்தில் இரு கட்சிகள் இடையே அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரும் 22 ம் தேதி பஞ்., தேர்தல் துவங்கவுள்ளது. இது தொடர்பான பிரசாரம் வெகு விரைவாக சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகுஜன்சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் முகேஷ் சுக்லாவின் தேர்தல் பணிக்கு இடையூறு செய்து ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கு பதிவு செய்த போலீசார் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி., சைலேந்திரகுமார், எம்.எல்.சி., அக்சய் பிரதாப்சிங் மற்றும் எம்எல்.ஏ.,க்கள் ராஜாபைய்யா , வினோத்குமார் சரோஜ், ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராஜாபைய்யா முலாயம்சிங்கிற்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடதக்தக்கது.இந்த கைதுக்கு சமாஜ்வாடி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீசார் மாயாவதியின் ஆளும் அரசுக்கு கைப்பாவையாக செயல்படுகிறது என்று கூறியுள்ளனர்.

ராசா- தொடரும் சோதனைகள்

Written on 11:43 PM by பூபாலன்(BOOBALAN)




இந்தியாவில் 2 ஜி அலைக்கற்றைஒதுக்கீடு தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை புதன்கிழமை(15.12.10) பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது.
சென்னை உட்பட பல இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனைகளில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் இடங்களும் அடங்கும்.
பெருவர்த்தக நிறுவனங்களுக்கான ஆதரவுகளை முன்னெடுக்கும் நீரா ராடியா, டிராய் என்ற இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான முன்னாள் தலைவர் பிரதீப் பைஜல், முன்னாள் அமைச்சர் ஆ ராசாவின் சொந்த கிராமத்தில் உள்ள வீடுகள் ஆகியவற்றில் சோதனைகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வரும், திமுகவின் தலைவர் மு.கருணாநிதியின் மகளுமான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி, அருட்தந்தை ஜெகத் கஸ்பார் ஆகியோர் இணைந்து நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான தமிழ் மையம் அமைப்பின் அலுவலகமும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐயுடன் இணைந்து அமலாக்கப் பிரிவினரும் நாடு தழுவிய அளவில் இடம் பெற்ற சோதனைகளை நடத்தியுள்ளனர்.
தமிழகத்திலிருந்து வெளியாகும் நக்கீரன் பத்திரிகையின் இணை ஆசிரியரான அ. காமராஜின் இல்லத்திலும் சோதனைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறையின் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அ.ராசா கடந்த மாதம் தனது பதவியை இராஜிநாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.
பதவி விலகிய பிறகு கடந்த வாரம் ராசாவின் வீட்டில் சோதனைகள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராசாவுக்கு முன்பு இருந்த அமைச்சர்களும் புனிதத் துறவிகள் அல்ல - ஜெயலலிதா

Written on 11:41 PM by பூபாலன்(BOOBALAN)

ராசாவுக்கு முன்னர் அமைச்சு பதவியில் இருந்தவர்கள் புனிதத் துறைவிகள் அல்ல என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 2001 ஆம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதையும் வரவேற்கிறேன்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு வேண்டுமென்றே மெத்தனப் போக்கினைக் கடைப்பிடித்ததன் காரணமாகத் தான் இதுபோன்றதொரு உத்தரவினை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டியதாயிற்று. இந்த ஊழலின் நாயகரான முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை ஏன் விசாரிக்கவில்லை? என்றே கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்டபிறகு தான் தன்னுடைய நடவடிக்கைகளை மத்திய புலனாய்வுத்துறை அண்மைக்காலமாகத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்தக் கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பி மூன்று வாரங்களான நிலையிலும் இதுநாள்வரை ராசாவிடம் விசாரணை நடத்தாதது, மத்திய புலனாய்வு அமைப்பு தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. மத்திய புலனாய்வுத் துறையின் இந்தச் செயல்பாடுதான் இந்த ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தீர்ப்பளிக்க தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய அமைச்சர் பதவியை ராசா இராஜிநாமா செய்ததோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினை முடிந்துவிடவில்லை என்று தொடர்ந்து நான் கூறி வந்துள்ளேன். இது ஓர் ஆரம்பம் தான் என்றும் கூறியிருந்தேன். இதற்குப் பிறகு தான் இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் பெயர்கள் எல்லாம் வெளிவர ஆரம்பித்தன.ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ராசா மத்திய அமைச்சராகவிருந்தபோது உச்சத்திற்கு சென்றாலும் முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதிமாறன் உட்பட ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள். யாரும் புனிதமான துறவிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

எனவே,ஸ்பெக்ட்ரம் ஊழலை 2001 ஆம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இருப்பினும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்பதைக் காரணம் காட்டி பாராளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு தவிர்க்கக்கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வரம்பு என்பது நிச்சயமாக சில வரையறைகளுக்குட்பட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் அரசிய பலம் வாய்ந்த பெரும்பாலானோர் இந்த ஊழலின் பின்னணியிலும் இந்த ஊழலுக்குத் துணையாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்க முடியாது. இந்த ஊழலில் உள்ள முழு உண்மையும் வெளிவர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு பாராளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பது தான். எனவே, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை உச்சநீதிமன்றம் கூர்ந்து கண்காணிக்கும் என்ற தீர்ப்பை வரவேற்கும் அதேசமயத்தில்,2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

கனிமொழி, ராஜாத்தி அம்மாள் கருத்து

Written on 11:25 PM by பூபாலன்(BOOBALAN)

http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2010/12/17/Article//001/17_12_2010_001_008.jpg
 

கவனிப்பார்களா ?

Written on 5:48 AM by பூபாலன்(BOOBALAN)

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தென்தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

Written on 10:01 PM by பூபாலன்(BOOBALAN)

சென்னை: இலங்கை அருகே வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தென்தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் நேற்று தெற்குக் கர்நாடகப் பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தொடர்ந்து அரபிக்கடலிலேயே நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அருகே வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பல பகுதிகளிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டத்தில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சாத்தான்குளத்தில் 8 செமீரும், செங்கல்பட்டில் 6 செமீரும், கோத்தகிரியில் 5 செமீ மழையும் பெய்துள்ளது.

ஜனவரி 17, விஜய் அரசியல் மாநாடு..

Written on 9:36 PM by பூபாலன்(BOOBALAN)

ஏறத்தாழ அதிகாரபூர்வமாகவே கசிந்துவிட்டது அந்த தகவல். த்ரி இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் விஜய். ஷங்கரின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னால் என்ன நடந்ததோ, தனது மனக்குமுறல்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.விடம் கொட்டி தீர்த்தாராம் எஸ்.ஏ.சி.
போயஸ் கார்டனுக்கு அவர் போய் சேர்ந்த நேரம் யாருக்கு நல்ல நேரமோ, விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஏனென்றால் சொல்லி சொல்லி சிலாகிக்கும்படி அமைந்ததாம் வரவேற்பு. யாராக இருந்தாலும் போயஸ் கார்டனுக்கு வெளியில்தான் காரை விட வேண்டும். சிறிது நேர நடை பயிற்சிக்கு பின்தான் அம்மாவை தரிசிக்க முடியும். ஆனால் எஸ்.ஏ.சி யின் கார் போர்டிகோ வரை அனுமதிக்கப்பட்டதாம். கிட்டதட்ட முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்களாம் இருவரும்.
இந்த சந்திப்புக்குப் பின் ‘காவலன்’ பட வெளியீட்டை பொங்கல் வரை ஒத்தி வைத்திருக்கிறார்கள். ஜனவரி 17 ந் தேதி அநேகமாக திருச்சியில் தனது முதல் அரசியல் மாநாட்டை விஜய் கூட்டினாலும் ஆச்சர்யமில்லை என்கிறது அரசியல் வட்டாரம்.

துண்டு, துண்டாக வெட்டி மனைவியின் உடலை பிரிட்ஜில் வைத்த என்ஜினீயர்: 2 மாதத்துக்கு பிறகு வெளியே தெரிந்தது

Written on 6:30 AM by பூபாலன்(BOOBALAN)

http://www.tamilcnn.com/images/resized/images/stories/tamilcnn/dec-2010/india/dehradunmurder295_200_200.jpgடெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் (37). கம்ப்யூட்டர் என்ஜினியர். இவரது மனைவி அனுபமா (33). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் முதலில் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார். அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்னர் உத்தரகாண்டம் மாநிலம் டேராடூனில் வேலை கிடைத்தது.


எனவே 1 1/2 மாதத்துக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து டேராடூன் வந்தனர். அங்குள்ள பிரகாஷ் விகாரில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த ராஜேஷ் அனுபமா தலையை பிடித்து சுவற்றில் அடித்தார். இதில அனுபமா மயங்கி விழுந்தார். பின்னர் அனுபமா இறந்துவிட்டதாக ராஜேஷ் கருதினார். எனவே கொலையை மறைக்க திட்டமிட்டார். அனுபமா உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் உடலின் ஒவ்வொரு பாகங்களாக எடுத்து சென்று ஊருக்கு வெளியே மறைவிடங்களில் வீசிவிட்டு வந்தார். தனது குழந்தைகளிடமும் உறவினர்களிடமும் அனுபமா டெல்லி சென்றதாகவும் பின்னர் அவரை காணவில்லை என்றும் சொல்லி வந்தார். ஆனால் அனுபமாவின் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் டேராடூனுக்கு நேற்று வந்து விசாரித்தார்.

ராஜேஷ் அவரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் வலுத்தது. டேராடூன் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரணை நடத்தியதில் அனைத்து விவரங்களும் தெரிய வந்தன. ராஜேசை கைது செய்தனர். கொலை நடந்த விவரம் 2 மாதத்துக்கு பிறகு வெளியே அம்பலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது

Written on 6:22 AM by பூபாலன்(BOOBALAN)

http://thatstamil.oneindia.in/img/2010/12/13-ramarajan1200.jpgமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகரும், அதிமுக தலைமைக்கழக பேச்சாளருமான ராமராஜனின் மருத்துவச் செலவு முழுவதையும் அதிமுகவே ஏற்றுக் கொண்டுள்ளது.

முன்னாள் எம்.பியான ராமராஜன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

திருச்செந்தூரில் நேற்று அவரது சகோதரர் மகள் காதணி விழாவில் பங்கேற்பதற்காக ராமராஜன் மதுரை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது அண்ணன் மகன் தாஸ் சென்றார். டிரைவர் ராஜரத்தினம் காரை ஓட்டினார்.

திருமங்கலத்தை அடுத்த நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரம் இருந்த பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் வேகமாக மோதியது.

இதில் டிரைவர் ராஜரத்தினம் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார். நடிகர் ராமராஜனுக்கு தலை, கால் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. வலது கையும் முறிந்தது. இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. தாசும் பலத்த காயம் அடைந்தார்.

காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நடிகர் ராமராஜன், தாஸ் ஆகியோரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ராமராஜன் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டாலும் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்து வருகிறார். அவரை அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து பார்த்தவண்ணம் உள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ராமராஜன் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், அவரதுஉத்தரவின் பேரில், கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அவர்களிடம் ராமராஜனால் பேச முடியவில்லை. கண்ணைத் திறந்து பார்க்க மட்டுமே முடிந்தது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராமராஜன் நிலையை விளக்கினார். பின்னர் அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் சிகிச்சைக்கான செலவுக்காக ரூ. 2 லட்சம் பணத்தைக் கட்டினார். மேலும், உங்களுக்கான அனைத்து மருத்துவ செலவுகளையும் கட்சியே பொறுப்பேற்றுள்ளதாக ராமராஜனிடம் அவர் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது'! (பட இணைப்பு)

Written on 6:20 AM by பூபாலன்(BOOBALAN)

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு வந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி, சேவலை மீட்டுச் சென்றார்.சேவல் மட்டுமல்ல, சாலையில் செல்லும் போது, எந்த விலங்கு தொந்தரவு செய்தாலும், போலீசில் புகார் தெரிவிக்கலாம் என, சேவலை "கைது' செய்த போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

சீமான் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் மீண்டும் உடைந்தது

Written on 2:19 AM by பூபாலன்(BOOBALAN)

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily 
news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil 
Cinema

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து சீமான் விடுதலையாகிறார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மனு மீதான வழக்கு விசாரணையின்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தினை ஒருவர் மீது பிரயோகிக்க மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என, சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார். சீமானுக்கு எதிராக கூடுதல் மாநகர ஆணையர் பிறபித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார்.
வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இல்லாதபோது, கூடுதல் ஆணையருக்கு முழு அதிகாரம் உள்ளதாக வாதாடினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டினர். எனவே, சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் விடுதலையாகிறார்.

பேங்க் வேலைவாய்ப்பு

Written on 2:01 AM by பூபாலன்(BOOBALAN)

Bank Post & Vacancies Last date to apply Written Test (tentative)
Central Bank of India  1163 Clerks Dec 8 ,2010 Feb 13, 2011
Baroda Gujarat Gramin Bank  20 Officers
73 Clerks
Dec 10, 2010 Feb 20, 2011
Feb 27, 2011
Baroda Rajasthan Gramin Bank  46 Officers
66 Assistants
Dec 15, 2010 Feb 20, 2011
Feb 27, 2011
LIC  375 Officers Dec 14, 2010 Feb 27, 2011
Chhattisgarh Gramin Bank 45 Officers
124 Assistants
Dec 15, 2010 Feb 20, 2011
Feb 27, 2011
IDBI Bank  700 Executives Dec 16, 2010 Jan 23, 2011
Union Bank of India  1640 Clerks Dec 16, 2010 Feb 6, 2011
National Insurance Company  300 Officers Dec17, 2010 Jan 30, 2011
Dena Bank  352 Officers
100 PO
Dec 28, 2010 Feb 20, 2010
Feb 27, 2010
Dena Bank 250 Clerks Jan 3, 2011 Mar 6, 2011

ராஜா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு : அதிர்ச்சியில் தி.மு.க.,

Written on 1:54 AM by பூபாலன்(BOOBALAN)


மாஜி அ‌மைச்சர் ராஜா வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது.


இப்படிப்பட்ட பூதாகர சர்ச்சையில் சிக்கியதால் தொலைதொடர்பு துறை அமைச்சர் கடந்த மாதம் 14ம் தேதி பதவியை இழந்தார் ராஜா. சுப்ரீம்கோர்ட்டின் கண்டிப்பு எனஅடுத்தடுத்து நெருக்கடிகள் ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இந்த வரிசையில் இன்று ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்த துவங்கினர்.



காலை 7.30 மணிக்கு ரெய்டு தொடங்கியது. டில்லியில் இருக்கும் அவரது அதிகாரப்பூர்வ வீடு மற்றும்சென்னை பெரம்பலூரில் இருக்கும் அவரது வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. சென்னை ஆர்.ஏ.புரம்,ஆல்வார்பேட், நந்தனம்,பெரம்பலூர்,கோவை,நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் ராஜாவின் உறவினர்கள்,நெருக்கமானவர்கள், பினாமியாக இருக்கலாமஎன சந்தேகிக்கப்படுபவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.

4 அதிகாரிகள்:ராஜாவின் வீடுகள் தவிற அவர் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகிய 4 அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுகிறது. டில்லியில் இருக்கும் தொலைதொடர்பு அலுவலகத்திலும் ரெய்டு நடைபெறுகிறது.

தி.மு.க., அதிர்ச்சி : மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க., வின் முக்கிய தலையான ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தப்படுவது தி.மு.க., மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

FeedBurner FeedCount

top

Back to Top
free counters

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket