தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் மாற்றம்: ஜெயலலிதா நடவடிக்கை
Written on 4:45 AM by பூபாலன்(BOOBALAN)
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பொறுப்பில் இருக்கும் பி.கிருஷ்ணன், செயலாளர் பொறுப்பில் இருக்கும் குப்புசாமி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தர்மபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி மாவட்ட துணை தலைவராக பி.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக டி.ஆர். அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.வி. ராஜேந்திரன் ஆகியோரும் இன்றுமுதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி நியமிக்கப்படுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொறுப்பில் சி.வி. ராஜேந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.