கூட்டணி தொடருமா? காங்கிரஸ் மவுனம்
Written on 11:05 PM by பூபாலன்(BOOBALAN)
புதுடில்லி :தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால், நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டில், கூட்டணி விவகாரம் பற்றி தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமல் மவுனம் சாதித்துள்ளது காங்கிரஸ் தலைமை.
இது குறித்து மாநாட்டில் பேசிய சோனியா, "நாம் கூட்டணியில் இருக்கும் மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய நேரம் இது' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். உ.பி.,யைப் பொறுத்து தனித்துப் போட்டி என்று ஏற்கனவே பொதுச்செயலர் ராகுல் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
If you enjoyed this post Subscribe to our feed
நடந்து முடிந்த காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில், பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் தலைமை, கூட்டணி விவகாரம் குறித்து எவ்வித தீர்மானமும் நிறைவேற்றவில்லை.குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய தி.மு.க., மற்றும் அவ்விவகாரத்தில் பார்லி கூட்டுக் குழு விசாரணை கோரி வரும் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் பற்றி எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால் தான் கூட்டணிக் கட்சிகள் பற்றி கருத்து ஏதும் குறிப்பிடாமல் காங்கிரஸ் மவுனம் சாதிப்பதாகக் கூறப்படுகிறது.இவை தவிர, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் அடுத்தாண்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.