வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தென்தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்
Written on 10:01 PM by பூபாலன்(BOOBALAN)
![]() அரபிக்கடலில் நேற்று தெற்குக் கர்நாடகப் பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தொடர்ந்து அரபிக்கடலிலேயே நீடிக்கிறது. இதனால் தமிழகத்தில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அருகே வளி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பல பகுதிகளிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டத்தில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சாத்தான்குளத்தில் 8 செமீரும், செங்கல்பட்டில் 6 செமீரும், கோத்தகிரியில் 5 செமீ மழையும் பெய்துள்ளது. |
