கொலை முயற்சி - ஆள் கடத்தல் வழக்கில் சமாஜ்வாடி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கைது
Written on 10:28 PM by பூபாலன்(BOOBALAN)
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதி அரசு எதிர்கட்சியினரை மிரட்டும் வகையில் முலாயம் சிங்கின் நெருங்கிய பிரமுகர்களான எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களை கைது செய்துள்ளது என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த கைது விவகாரம் மாநிலத்தில் இரு கட்சிகள் இடையே அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரும் 22 ம் தேதி பஞ்., தேர்தல் துவங்கவுள்ளது. இது தொடர்பான பிரசாரம் வெகு விரைவாக சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன்சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் முகேஷ் சுக்லாவின் தேர்தல் பணிக்கு இடையூறு செய்து ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கு பதிவு செய்த போலீசார் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி., சைலேந்திரகுமார், எம்.எல்.சி., அக்சய் பிரதாப்சிங் மற்றும் எம்எல்.ஏ.,க்கள் ராஜாபைய்யா , வினோத்குமார் சரோஜ், ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராஜாபைய்யா முலாயம்சிங்கிற்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடதக்தக்கது.இந்த கைதுக்கு சமாஜ்வாடி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீசார் மாயாவதியின் ஆளும் அரசுக்கு கைப்பாவையாக செயல்படுகிறது என்று கூறியுள்ளனர்.