ராஜா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு : அதிர்ச்சியில் தி.மு.க.,
Written on 1:54 AM by பூபாலன்(BOOBALAN)
மாஜி அமைச்சர் ராஜா வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது.
இப்படிப்பட்ட பூதாகர சர்ச்சையில் சிக்கியதால் தொலைதொடர்பு துறை அமைச்சர் கடந்த மாதம் 14ம் தேதி பதவியை இழந்தார் ராஜா. சுப்ரீம்கோர்ட்டின் கண்டிப்பு எனஅடுத்தடுத்து நெருக்கடிகள் ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இந்த வரிசையில் இன்று ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்த துவங்கினர்.
காலை 7.30 மணிக்கு ரெய்டு தொடங்கியது. டில்லியில் இருக்கும் அவரது அதிகாரப்பூர்வ வீடு மற்றும்சென்னை பெரம்பலூரில் இருக்கும் அவரது வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. சென்னை ஆர்.ஏ.புரம்,ஆல்வார்பேட், நந்தனம்,பெரம்பலூர்,கோவை,நீலகிரி ஆகிய இடங்களில் இருக்கும் ராஜாவின் உறவினர்கள்,நெருக்கமானவர்கள், பினாமியாக இருக்கலாமஎன சந்தேகிக்கப்படுபவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.
4 அதிகாரிகள்:ராஜாவின் வீடுகள் தவிற அவர் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகிய 4 அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுகிறது. டில்லியில் இருக்கும் தொலைதொடர்பு அலுவலகத்திலும் ரெய்டு நடைபெறுகிறது.
தி.மு.க., அதிர்ச்சி : மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க., வின் முக்கிய தலையான ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தப்படுவது தி.மு.க., மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.