ராஜாவை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்
Written on 11:53 PM by பூபாலன்(BOOBALAN)
சென்னை : ""ராஜாவை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பின், அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளதே?
ராஜாவை கைது செய்ய வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு உங்கள் கட்சி கூட்டணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
கூட்டணியில் முன்னேற்றம் ஏற்படும் போது உங்களிடம் தெரிவிப்பேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை: வழங்கினார் ஜெ., :கல்லூரி மாணவ, மாணவியருக்கு 13 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகையும், கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்ச ரூபாய் குடும்ப நல நிதியுதவியும் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.அண்ணா அறக்கட்டளை சார்பில், கட்சி தொண்டர்களுக்கு குடும்ப நல நிதி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று, அ.தி. மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, நேற்று மதியம் 1.05 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.மருத்துவம், இன்ஜினியரிங், நர்சிங், கலை மற்றும் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிலும் 41 மாணவ, மாணவியரின் கல்விக்கு தேவைப்படும் தொகையான 13 லட்சத்து 23 ஆயிரத்து 924 ரூபாய் மற்றும் 21 கட்சியினரின் குடும்பங்களுக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, குடும்ப நல நிதியுதவியாக ஜெயலலிதா வழங்கினார்.இந்நிகழ்ச்சி முடிந்ததும், கட்சி அலுவலகத்தில் திரளாக கூடியிருந்த தொண்டர்களுக்கு ஜெயலலிதா இரு கைகூப்பி வணக்கம் செலுத்தி விட்டு தனது காரில் கிளம்பினார். அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில், "இதுவரை மொத்தம் 822 ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு 3 கோடியே 69 லட்சத்து 25 ஆயிரத்து 695 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.