நான்குமாத குழந்தையின் நாக்கை வெட்டிய பெண்
Written on 10:56 PM by பூபாலன்(BOOBALAN)
நான்குமாத குழந்தையின் நாக்கை வெட்டிய பெண்
கடந்த புதனன்று, சாமியார் வந்த போது, பக்கத்து வீட்டில் வசிப்பவரின் 4 மாத பெண் குழந்தையை மஞ்சுதேவி கொஞ்சிக் கொண்டிருந்தார். குழந்தையை பார்த்த சாமியார், ‘இந்த குழந்தைக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கிறது. இதன் நாக்கை கொஞ்சம் வெட்டி விட்டால், பிற்காலத்தில் இந்த பெண் செல்வ செழிப்புடன் வாழும்’ என்று கூறியிருக்கிறார்.
இதை கேட்ட மஞ்சுதேவி, பக்கத்து வீட்டுக் குழந்தை என்று கூட பார்க்காமல், கத்தி எடுத்து குழந்தையின் நாக்கை வெட்டி எடுத்து விட்டார். குழந்தையின் அலறல் சத்தம் அதிகமாகவே பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்துள்ளார்.
பயந்து போன மஞ்சுதேவி குழந்தையை அடுப்பங்கரையில் போட்டு விட்டு ஓடி விட்டார். போலி சாமியார் அதற்கு முன்பே எஸ்கேப்...
குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ‘குழந்தை இன்னும் அபாய கட்டத்தில்தான் உள்ளது. மஞ்சுதேவியைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்’ என்று மகாராஜ்கன்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தி நேற்று தெரிவித்தார்.
