மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயில் உருவாக்கபடுகுறது
Written on 10:45 PM by பூபாலன்(BOOBALAN)
மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயில் உருவாக்கபடுகுறது
மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயில் என்ஜினை சீன என்ஜினீயர்கள் உருவாக்கி வருகிறார்கள். அதி வேக ரெயில் கட்டுமானத்தில் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்க நாங்கள் விரும்புகிறோம் என்று ரெயில்வே அமைச்சரக தலைமை என்ஜினீயர் ஹெ ஹூவாவூ தெரிவித்தார். மணிக்கு 394.3 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயிலை பீஜிங்குக்கும், டியான்ஜின் நகருக்கும் இடையே சீனா அறிமுகப்படுத்தி 2008-ம் ஆண்டு ஜுன் 24-ந் தேதி சீனா உலக சாதனை படைத்தது.கடந்த மாதம் மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயிலை ஷாங்காய் -ஹாங்க்ஷூ நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தி சாதனை படைத்தது.
இப்போது மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் ஓடும் ரெயில் என்ஜினை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள். கடந்த மாதம் செப்டம்பர் மாத நிலவரப்படி சீனாவில் 7 ஆயிரம் கி.மீ. நீளத்துக்கு அதிவேக ரெயில்பாதைகள் உருவாக்கப்பட்டது. இந்த நிலவரம் 2012-ம் ஆண்டு இரு மடங்காக அதிகரிக்கப்படும்.






