ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள..,சி.பி.ஐ.,விசாரணை முடிந்து சென்னை திரும்புகிறார்
Written on 10:54 PM by பூபாலன்(BOOBALAN)
சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணை முடித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மதியம் 1 மணி அளவில் சென்னை வருகிறார். முதல்வர் கருணாதியின் தோள்கொடுக்கும் உற்றவராக இருந்த ராஜா தற்போது முறைகேட்டில் சிக்கி தனது தலைவரிடம் இருந்த முக்கியத்துவத்தை இழந்துள்ளார்.
நாடு அளவில் பெரும் எதிர்ப்பு கிளப்பிய எதிர்கட்சிகளின் பிரசாரத்துக்கு தி.மு.க., வினால் ஈடு கொடுக்க முடியாமல் போனது என்பதுதான் <உண்மை. இதற்கு ஒரு சான்றாக பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் முழுமையாக முடங்கிப்போனது.
இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று இதன் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டின் அதிரடி கேள்விகளால் சி.பி.ஐ., தனது பணியை வேகப்படுத்தியது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா, நீரா ராடியா மற்றும் முக்கியஸ்தர்கள் உறவினர்கள் என பலரது அலுவலகம், வீடுகளில் ரெய்டு நடத்தினர். இதில் முக்கிய ஆவணஙகள் சிக்கியதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் நீரா ராடியாவுடன் நேரடி விசாரணை நடத்தியிருக்கிறது. ராஜாவிடம் மட்டும் 2 நாள் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 2 நாள் விசாரணையை முடித்து அவர் சென்னை திரும்புகிறார்.காலை11 மணி அளவில் வருவார் என முதலில் கசிந்தது, தற்போது மதியம் 1 மணி அளவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.விசாரணை குறித்து இது வரை நிருபர்களிடம் கருத்து எதுவும் தெரிவிக்காத ராஜா இன்று ஏதும் சொல்வார் என தெரிகிறது. ராஜாவிடம் மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என்றும் டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.