ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள..,சி.பி.ஐ.,விசாரணை முடிந்து சென்னை திரும்புகிறார்
Written on 10:54 PM by பூபாலன்(BOOBALAN)
சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணை முடித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மதியம் 1 மணி அளவில் சென்னை வருகிறார். முதல்வர் கருணாதியின் தோள்கொடுக்கும் உற்றவராக இருந்த ராஜா தற்போது முறைகேட்டில் சிக்கி தனது தலைவரிடம் இருந்த முக்கியத்துவத்தை இழந்துள்ளார்.
நாடு அளவில் பெரும் எதிர்ப்பு கிளப்பிய எதிர்கட்சிகளின் பிரசாரத்துக்கு தி.மு.க., வினால் ஈடு கொடுக்க முடியாமல் போனது என்பதுதான் <உண்மை. இதற்கு ஒரு சான்றாக பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் முழுமையாக முடங்கிப்போனது.
இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று இதன் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது. கோர்ட்டின் அதிரடி கேள்விகளால் சி.பி.ஐ., தனது பணியை வேகப்படுத்தியது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக ராஜா, நீரா ராடியா மற்றும் முக்கியஸ்தர்கள் உறவினர்கள் என பலரது அலுவலகம், வீடுகளில் ரெய்டு நடத்தினர். இதில் முக்கிய ஆவணஙகள் சிக்கியதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் சி.பி.ஐ., அதிகாரிகள் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் நீரா ராடியாவுடன் நேரடி விசாரணை நடத்தியிருக்கிறது. ராஜாவிடம் மட்டும் 2 நாள் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் 2 நாள் விசாரணையை முடித்து அவர் சென்னை திரும்புகிறார்.காலை11 மணி அளவில் வருவார் என முதலில் கசிந்தது, தற்போது மதியம் 1 மணி அளவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.விசாரணை குறித்து இது வரை நிருபர்களிடம் கருத்து எதுவும் தெரிவிக்காத ராஜா இன்று ஏதும் சொல்வார் என தெரிகிறது. ராஜாவிடம் மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என்றும் டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.


தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், நேற்று இரண்டாவது நாளாக திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய ஊர்களில் நடந்த இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் ராகுல் பேசியதாவது: காங்., பேரியக்கம், 125 ஆண்டு கால வரலாறு மிக்க மாபெரும் இயக்கம். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் காங்., ஆட்சியமைக்கும் வலுவான நிலையை ஏற்படுத்த வேண்டும். தன்னிச்சையாக அது அமையாமல், காங்., ஆட்சியை ஏற்படுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகம், இளைய தலைமுறையின் கைகளுக்கு வர வேண்டும். அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் நிச்சயம் ஏற்படும்.





காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர், ராகுல் காந்தியின் தமிழக விஜயத்தின் போது, அவர் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் வெளியிடப்பட்டள்ள அறிக்கையில்;
இந்தியாவில் 2 ஜி அலைக்கற்றைஒதுக்கீடு தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை புதன்கிழமை(15.12.10) பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது.
ராசாவுக்கு முன்னர் அமைச்சு பதவியில் இருந்தவர்கள் புனிதத் துறைவிகள் அல்ல என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் (37). கம்ப்யூட்டர் என்ஜினியர். இவரது மனைவி அனுபமா (33). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் முதலில் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார். அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். பின்னர் உத்தரகாண்டம் மாநிலம் டேராடூனில் வேலை கிடைத்தது.
அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.







