ஐஸ்லாந்து எரிமலை வெடித்துச் சிதறிய போது எடுக்கப்பட்ட தத்ரூபமான படங்கள்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
Written on 3:58 AM by பூபாலன்(BOOBALAN)
ஐஸ்லாந்தில் உள்ள இபலஜோகுல் எரிமலை கடந்த மார்ச் மாதத்தில் வெடித்துச் சிதறியது.
இது மக்களால் பாரிய அளவில் அறியப்பட்ட ஒரு எரிமலையல்ல இருந்தாலும் அது மார்ச் மாதத்தில் மூர்க்கமாக வெடித்தது.
இந்தப் பிரதேசத்தில் சுறுறுலாப் பயணம் மற்றும் விமான சேவைகள் என்பனவும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
ஐஸ்லாந்தின் படப்பிடிப்பாளர் றக்னார் சிகுட்ஸன் இந்தக் காட்சியை தத்ரூபமாகப் படம் பிடித்துள்ளார்.
எரிமலை வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த போது அதிலிருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் துகள்கள் என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேலாக விமானத்தில் பறந்து சென்று இந்தக் காட்சிகளைத் தத்ரூபமாகப் படமெடுத்துள்ளார்.
52 வயதான இந்தப் படப்பிடிப்பாளர் சுமார் 10, 000 படங்களை எரிமலைக்கு மேலாகப் பறந்தவாறே எடுத்துள்ளார். இந்தப் படங்கள் இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.