செல்லப்பிராணி நாயை வேலியில் கட்டி பட்டினி போட்டு கொடுமை! (பட இணைப்பு)
Written on 9:02 PM by பூபாலன்(BOOBALAN)
வேலியில் கட்டப்பட்டு பட்டினியால் வாடி வதங்கிப் போயிருந்த இந்த நாயை வீதியால் சென்ற ஒருவர்தான் கண்டுள்ளார் அங்கிருந்து அதனால் அசையக் கூட முடியவில்லை.
ஒரு தள்ளுவண்டியின் உதவியோடு அதைக் கொண்டுபோய் அருகில் உள்ள மிருக வைத்திய சாலையில் சேர்த்தார்.
இந்த நாய் மிக மோசமான நிலையில் இருந்தது. அதனால் நிற்கக் கூட முடியவில்லை.அதன் சருமமும் ஒரு வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது.
பல மாதங்களாகவே இந்த நாய் வேதனைகளை அனுபவித்திவந்துள்ளமைளை புரிந்துகொள்ள முடிந்தது என்று இந்த நாயைக் கொடுமைக்குள்ளாக்கிய அதன் எஜமானைத் தேடி வரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறினார்.
இந்த கொடுமைக்கார எஜமான் யாரென்பது இன்னும் தெரியவில்லை. இந்த நாயை இந்தளவு கொடுமைபடுத்தியுள்ளமை முற்றிலும் அனுமதிக்க முடியாத ஒரு விடயம். சரியான முறையில் இந்த நாயைக் கவனித்திருந்தால் அதன் நிலை இந்தளவு மோசமடைந்திருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.
உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும்,5000 ஸ்டேலிங் பவுண் தண்டமும் விதிக்கப்படும்.
ஒரு நாய் பட்டினி போடப்பட்டதற்கு வெள்ளைக்காரன் படுற பாட்டைப் பார்த்தீங்களா? இங்க மனுசனே......
