கிரிக்கெட் வீரர் பிரவீண்குமாருக்கு 18-ந்தேதி திருமணம்
Written on 9:14 PM by பூபாலன்(BOOBALAN)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் பிரவீண் குமார். இவர் ஒருநாள் போட்டியில் முதன்மை பவுலராக இருக்கிறார். பிரவீண்குமாருக்கு வருகிற 18-ந்தேதி திருமணம் நடக்கிறது. குழந்தை பருவ முதல் பழகி வந்த சப்னா என்பவரை அவர் திருமணம் செய்கிறார். இந்த திருமணம் மீரட்டில் நடக்கிறது.
இதற்கான திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி கடந்த 7-ந்தேதி நடந்தது. பிரவீண்குமார் திருமண நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்திய அணி நியூசிலாந்துடன் விளையாடும் 3-வது டெஸ்ட் 20-ந்தேதி தொடங்குகிறது. திருமணம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிரவீண்குமார் ஆடமாட்டார் என தெரிகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது.
If you enjoyed this post Subscribe to our feed