மு.க.அழகிரி மகன் திருமணம்: மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி ப.சிதம்பரம் வருகை
Written on 9:04 PM by பூபாலன்(BOOBALAN)
மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி-அனுஷா திருமணம் நாளை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் முதல்- அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மத்திய மந்திரிகள் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
திருமண விழாவில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று மதுரை வருகின்றனர். நாளை காலை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்றனர். இதையடுத்து மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
If you enjoyed this post Subscribe to our feed