மின்காந்த அலைகள் மூலம் மூளையைத் தூண்டுதல்
Written on 4:49 AM by பூபாலன்(BOOBALAN)
லண்டன்: மின்காந்த அலைகளைக் கொண்டு மூளையின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு. மனிதர்களின் அனைத்து செயல்களையும் நிர்ணயம் செய்வது மூளைதான். அதுதான் நமக்கு எஜமான்.
மூளையின் கட்டளைக்கு ஏற்பதான் உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. மூளையில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் குழுவினர் சோகன் கந்தோஷ் தலைமையில் மூளையின் செயல்பாடு மற்றும் குறைபாடுகளை களைவது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினர்.
மூளையின் குறிப்பிட்ட பகுதியை குறைந்த அழுத்தம் உள்ள மின்சக்தியால் தூண்டுவதன் மூலம் அவர்களை கணக்கில் புலிகளாக்கலாம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு முடிவில் கிடைத்த தவகல்கள்: மூளையின் குறிப்பிட்ட பகுதியை குறைந்த அழுத்தம் உள்ள மின்சக்தியால் தூண்டுவதன் மூலம் அவர்களுக்கு கணக்கு பார்முலாக்கள் அத்துபடியாகும்.
கணக்கில் திறமைசாலியாக வரமுடியும். இத்தகைய சிகிச்சை முறையால் டிஸ்கேல்குலியா அல்லது எண் பார்வை குறைபாட்டை சரிசெய்ய முடியும். ஆனால் சரியான முறையில் சிகிச்சை அளிக்காவிட்டால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் ஆபத்துக்களும் அதிகம் இருக்கிறது. மூளையின் பிற குறைபாடுகளை களைய மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் இடையே இந்த உண்மை தெரியவந்துள்ளது.
If you enjoyed this post Subscribe to our feed