நோயைத் தீர்க்க உதவும் `தட்டச்சு’!
Written on 10:17 PM by பூபாலன்(BOOBALAN)
ஆபத்துக் காலங்களில் சிலருக்கு பேசவே வராது. நாக்கு குளறுபடி செய்யும். காக்காய் வலிப்பு, முடக்குவாதம் மற்றும் கோமா நிலையை அடைந்தவர்கள் இத்தகைய பாதிப்படைவதில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் நிலையை கண்டறிய பல்வேறு உபகரணங்கள் இருந்தாலும் தற்போது புதிதாக வந்துள்ளது தட்டச்சு முறை. இது நோயாளிகளின் நினைவுகளை கணினியில் தட்டச்சு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பேசுவதன் முலமே தட்டச்சு செய்வது பிரபலமாக இருந்து வருகிறது. அது தொழில் உலகம் சார்ந்ததாக உள்ளது. ஆனால் இந்த நினைவலை தட்டச்சு முறை மருத்துவ துறையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. நோய் உடைய ஒருவரை பேச வைத்து தட்டச்சு செய்யப்பட்டது. பிறகு பேசாமல் வெறும் நினைவுகள் முலம் ளையில் ஏற்படும் மின்தூண்டல்களுக்கு ஏற்ப தட்டச்சு பதிவு செய்யப்பட்டது.
இறுதியில் நினைவுகளை வரிவடிவமாக கொண்டுவரும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. மின் தூண்டல்கள் எண்களாக உள்வாங்கப்பட்டு, எழுத்துக்களாக மாற்றம் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இந்த தொழில்ட்பத்தால் பல வியாதிகளின் தன்மை, பலன்களை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். மேலும் முக்கியமான விவரங்களையும் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெறவும் வசதியாக இருக்கும் என்று தெரிகிறது.
If you enjoyed this post Subscribe to our feed