அழகிரி-ஸ்டாலினும், தி.மு.க.வும் கருணாநிதிக்கு 2 மிகப்பெரிய சொத்துக்கள்'' நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
Written on 10:59 PM by பூபாலன்(BOOBALAN)
முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தி.மு.க.வும், அழகிரி-ஸ்டாலினும் 2 மிகப்பெரிய சொத்துகள்' என்று, நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மத்திய மந்திரி மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி-அனுஷா திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
நிறைவான வாழ்க்கை
"இந்த கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கும் தமிழக முதல்-அமைச்சர் என் அருமை நண்பர், இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவர் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனக்கும் 2 பேத்திகள் உள்ளனர். யாத்ரா, லிங்கா. அவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது, கிடைக்கக் கூடிய சந்தோஷம் அவர்கள் பிறந்த பிறகு தான் நான் அதை உணர்ந்தேன்.
பேரப் பசங்க கிட்ட விளையாடிக் கொண்டிருக்கும் போது இவ்வளவு சந்தோசம்னா, பேரனோட பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிற கலைஞருக்கு எவ்வளவு சந்தோசம் இருக்கும். அவ்வளவு நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மிகப்பெரிய சொத்து
அவருக்கு 2 மிகப் பெரிய சொத்துகள் உள்ளன. ஒன்று தி.மு.க., மற்றொன்று அழகிரி-ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாத்தனும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாத்தனும்.
அழகிரியை விட ஸ்டாலினை எனக்கு 32 வருடங்களுக்கு முன்பே நல்லாத் தெரியும். கோபாலபுரம் பகுதியில் அங்க நான் இருந்தேன், ஒரு மொட்டை மாடியில். 8 மணிக்கு மேலே அந்த பகுதியில் ஒரு காக்கா கூட போகாது.
நல்ல மொட்டமாடி மேலே உட்காந்து கொண்டு நாங்கபாட்டுக்கு 4, 5 பேருடன் பேசிக்கொண்டிருப்போம். 10 மணிக்கு மேலே ஒருத்தர் 3, 4 பேரோடு பேசிக்கிட்டு போவாரு. அது ஸ்டாலின்னு சொல்லிடுவோம். அதே போல 10, 15 பேரோடு பேசிக்கிட்டு போவாரு. அது அழகிரி சார். அப்ப இருந்தே அவர் பின்னே கூட்டம் அதிகம் இருக்கும். அன்பான மனிதர்.
நட்சத்திரம்
இந்த மதுரைக்கு நான் ரொம்ப நாள் கழித்து வருகிறேன். கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை மதுரைக்கு வந்து இருந்தேன். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றேன். சச்சு, செந்தாமரை கூட வந்திருந்தாங்க. அங்கு அர்ச்சகர் உங்களுடைய நட்சத்திரம் என்னது எனக்கேட்டாரு. நான் பிறந்த நாளே தெரியாதுன்ன அப்போ.
திரை உலகிற்கு வந்த பின்பு தான் என்னுடைய ஜாதகத்தையே எடுத்தார்கள். முதலில் உருப்படாம போயிடுவேன் என்று விட்டு விட்டார்கள். பட்டர் கேட்டப்போ என்ன நட்சத்திரம் என்று தெரியாது என்றேன். உடனே சச்சு சொன்னாங்க கடவுள் நட்சத்திரம், அதை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள் என்று சொன்னார். அதற்குபிறகு என்னுடைய நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம்.
மதுரை
இந்த மதுரையைப் பத்தி ஒண்ணு சொல்லுறேன். பெங்காலி பாபான்னு ஒருவர். மிகப்பெரிய மகான். அவரும், தோதாபுரி மகானும் இமயமலையில் இருந்தார்கள். அவர்களை காண்பது மிகவும் அரிது. அவர்கள் நாட்டின் பல பகுதிக்கு சென்று இருந்தார்கள். தமிழ்நாட்டிற்கு வந்த போது மதுரை, சிதம்பரம், பழனி, திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு போய் இருக்கிறார்கள்.
அதில் மதுரைக்குத் தான் முதலிடம். அப்படிப்பட்ட மதுரையில் உங்களை எல்லாம் பார்ப்பதில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.''
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
If you enjoyed this post Subscribe to our feed