சென்னை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம்; 24 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை
Written on 9:15 PM by பூபாலன்(BOOBALAN)
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி வந்ததால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த பகுதி வங்க கடலில் தற்போது தென்மேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது.
இது சென்னைக்கு கிழக்கே 400 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதால், வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இன்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. புறநகரிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அலு வலகங்கள் செல்வோர் மிகவும் அவதிப்பட்டனர்.
போக்குவரத்து நெரிசலும் கடுமையாக இருந்ததால் வாகனம் ஓட்டுவோர் பெரிதும் சிரமப்பட்டனர். இன்று காலை நுங்கம்பாக்கத்தில் 5.6 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 8.3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
