நாய்கள் வாலாட்டுவது நன்றிக்காக அல்ல; மகிழ்ச்சிக்காக!
Written on 2:00 AM by பூபாலன்(BOOBALAN)
நாய் நன்றியுள்ள பிராணி. நாம் உணவிட்டால் நன்றியுடன் வாலாட்டும், வீட்டைப் பாதுகாக்கும் என்று கூறி வருகிறோம். நாய் வாலாட்டுவது குறித்து ஒரு ஆராய்ச்சி நடந்தது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… நாய்கள் வாலாட்டுவது (நன்றிக்காக அல்ல) மகிழ்ச்சிக்காக. அதுவும் எந்த திசையில் வாலாட்டுகிறது என்பதில்தான் விஷயமே உள்ளது. நாய்கள் இடது பக்கமாக வாலாட்டினால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம். 56 சதவீத நாய்கள் இப்படித்தான் வாலாட்டுகிறதாம்.
21 சதவீத நாய்கள் எப்போதும்போல் வாலாட்டாமல் இருக்கின்றன அல்லது எப்போதாவது வலதுபக்கமாக வாலாட்டுகின்றன. தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்ததும் 41 சதவீத நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டு கின்றன. தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்ததும் 41 சதவீத நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டுகின்றன. நாய்கள் வாலாட்டுவது வேதித்தன்மையின் வெளிப்பாடாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
நாம் அதற்கு தேவையானதை வழங்கிவிடுவதால் அவை நம்முடன் மிக நெருக்கமாகிவிடுகின்றன. நாய்களின் வாலை வெட்டிவிடுவதன் முலம் அவை மற்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் திறனை தகர்த்துவிடுகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்தது ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் ஆகும்.