நாடு முழுவதும் தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடியோ ஒலி-ஒளிபரப்புகள் நிறுத்தம்
Written on 2:14 AM by பூபாலன்(BOOBALAN)
நாடு முழுவதும் தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடியோ ஆகியவற்றின் ஒலி-ஒளிபரப்புகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரசார் பாரதி அமைப்பை கலைத்துவிட்டு, தூர்தர்ஷன் மற்றும் ஆல் இண்டிய ரேடியோவை மீண்டும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு மாற்றக் கோரியும், தங்களை மீண்டும் அரசுப் பணியாளர்களாக மாற்றக் கோரியும் பிரசார் பாரதி பணியாளர்கள் இன்று காலை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்று காலை 9 மணி முதல் தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடியோ பணியாளர்கள் ஒலி-ஒளிபரப்பை முடக்கியுள்ளனர். இதனால் நாடு முழுவதுமே இந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
