நம்ம ரஜினி சொல்றார் “திராவிடர்களின் உண்மையான படம் மைனா”
Written on 4:56 AM by பூபாலன்(BOOBALAN)
மைனா திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, இந்த மாதிரிப் படத்தில் நடிக்காமல் போய்விட்டேனே என்று கூறியதுடன், ‘திராவிடர்களின் உண்மையான படம் மைனா’ என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
எந்த நல்ல விஷயத்தையும் முதலில், தாமாகவே முன்வந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகரான ஒருவரை தேடினாலும் பார்க்க முடியாது.
சில நாட்கள் முன்பு ‘மைனா’ படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்து வெளியே வந்தவுடன் மைனாவின் இயக்குநர் பிரபு சாலமனை அழைத்து ஆதரவாக அணைத்து கன்னத்தில் முத்தமிட, ஆனந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார் பிரபு சாலமன்.
படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினி, ‘இந்த காவிய படத்துல நான் ஒரு சிறிய பாத்திரத்திலாவது நடிக்காமப் போய்ட்டேனே’ என்றும் கூறினார். வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்!
வெறும் பேச்சோடு விட்டு விடாமல் தன் வாழ்த்துகளை ‘மைனா’ படக்குழுவினருக்கு எழுத்து மூலமாகவும் தெரிவித்திருக்கிறார் ரஜினி. நல்ல படம் என்று பாராட்டுக்களைப் பெற்றாலும், வசூலில் மிகவும் சிரமப்படும் மைனாவுக்கு நிச்சயம் இந்த பாராட்டு ஒரு உற்சாக டானிக்தான்.
If you enjoyed this post Subscribe to our feed