**HI**FRIENDS**WELCOME TO MY BLOG**

சரித்திர நாயகன்

Written on 10:02 PM by பூபாலன்(BOOBALAN)




மக்கள் திலகம், புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்(வாத்தியார்) அவர்களின் 22 ஆவது நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி 22 விடயங்கள்.

1) எம்.ஜி.ஆர் என்பதன் விரிவாக்கம் - மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

2) பிறந்தது - 17 /1 /1917 நாவலப்பிட்டிய , இலங்கை.

3) மறைந்தது - 24 /12 /1987 சென்னை,இந்தியா

4) முதல்ப்படம் - சதிலீலாவதி

5) இறுதிப்படம் - மதுரயை மீட்ட சுந்தர பாண்டியன்

6) தமிழ் சினிமாவின் முதல் தேசிய விருது பெற்ற நடிகர் , ரிக்சாக்காரன் படத்துக்காக,1972

7) எம்.ஜி.ஆர் 136 படங்கள் நடித்திருந்தாலும் 'எங்கவீட்டுப்பிள்ளை' திரைப்படம் இவரது உச்ச வெற்றிபெற்ற படமாகும்.



8) ஜப்பான்,சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு முதல் முதல் படப்பிடிப்புக்காக சென்ற முதல் நடிகரும், அங்கு ரசிகர் மன்றங்கள் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட நடிகரும் எம்.ஜி.ஆர் அவர்களே .

9 ) நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என்பன எம்.ஜி.ஆரே இயக்கி நடித்த மிகப்பெரும் வெற்றிப்படங்கள்.

10) இவர் சரோஜாதேவி, ஜெயலலிதாவுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 27 படங்கள்

11) இவர் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி , ஆனால் இந்தப்படம் சரியாகப்போகவில்லை.

12) யாழ்ப்பாணத்துக்கு ஒரே ஒரு தடவை சரோஜாதேவி சகிதம் எம்.ஜி.ஆர் சென்றுள்ளார், அப்போது வீதியெங்கும் திரண்ட மக்கள் அவருக்கு அமோக வரவேற்ப்பு வழங்கினர்.

13) எம்.ஜி.ஆர் தனது கலைவாரிசாக இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களை அறிவித்திருந்தார்.

14) எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின்னரே எம்.ஜி.ஆர் ஆல் வசனங்களை சரியாக உச்சரிக்க முடியாமல் போனது. சுடப்பட்டபின்னரும் சுடப்படமுன்னருமாக எம் .ஜி.ஆர் வசனம் பேசிய படம் காவல்க்காரன்.

15) இறக்கும்வரை ஒரு துப்பாக்கி குண்டை தனது தொண்டைக்குழியில் தாங்கியபடியே சினிமாவில் நடித்தும் , அரசியலில் ஜெயித்தும் வந்தார்.

16) எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்துள்ளார்.

17) தொடர்ந்து மூன்று முறை முதல்வரான ஒரே தமிழக முதல்வர் இவர்தான்.

18) எம்.ஜி.ஆர் முதல்வராகிய மூன்று தடவைகளும் வேறு வேறு தொகுதிகளிலேயே ஜெயித்துள்ளார். அரிப்புக்கோட்டை ,மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி என்பனவே அவர் ஜெயித்த தொகுதிகள்.

19) எம்.ஜி.ஆர் இறக்கும் வரை எம் .ஜி.ஆர் ஆல் உருவாக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க ஒரேயொரு லோக்சபா தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்தது ,1980

20) தமிழ் இயக்கங்களுக்கு , குறிப்பாக புலிகளுக்கு பணமாகவும், வேறு தார்மீக உதவிகளாகவும் எம்.ஜி.ஆர் செய்த உதவிகள் இன்றும் அவர்களால் நன்றியுடன் பேசப்படுகிறது

21) சென்னை மற்றும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகங்கள் எம்.ஜி.ஆருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் கொடுத்து கௌரவித்தன.

22) எம்.ஜி.ஆர் இறந்த பின்னர் இந்திய அரசால் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

If you enjoyed this post Subscribe to our feed

No Comment

Post a Comment

FeedBurner FeedCount

top

Back to Top
free counters

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket