**HI**FRIENDS**WELCOME TO MY BLOG**

வித்தியாசமான நட்பு! இப்படி மனிதனும் இருந்தால்...! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Written on 1:50 AM by பூபாலன்(BOOBALAN)

“சீட்டா” என அழைக்கப்படும் சிறுத்தைகளுக்கு மான்களை வேட்டையாடி உண்பதென்றால் அலாதி பிரியம்.

உலகில் சிறுத்தையும் மானும் ஒன்றாக இருப்பதைக் காண்பது நடக்காத ஒரு விடயம்.

ஆனால் அந்த அபூர்வமான வித்தியாசமான காட்சியை இங்கு காணமுடிகின்றது. இங்குள்ள சிறுத்தையும் மானும் உற்ற நண்பர்கள்.

ஸ்பைஸ்ஜெட் – இப்ப மாறன் குடும்ப சொத்து…

Written on 11:14 PM by பூபாலன்(BOOBALAN)

spicejet

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் தலைவரானார் தமிழகத்தின் பெரும் தொழிலதிபரான கலாநிதி மாறன்.
மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார்.
இப்போது அவரிடம் 38.66 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டின் இயக்குநர் குழுவில் புரமோட்டர் டைரக்டராக அவர் இணைந்தார். தொடர்ந்து மாறனின் சார்பில் எஸ் ஸ்ரீதரன், நிகோலஸ் மார்டின் பால், ஜெ ரவீந்திரன், எம் கே ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வழி விடும் பொருட்டு, ஏற்கெனவே இயக்குநர் குழுவில் இருந்த பிஎஸ் கன்சாக்ரா (இவரது குடும்பம்தான் ஸ்பைஸ்ஜெட்டை நிறுவியது), கிஷோர் குப்தா, முக்காராம் ஜான் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இப்போது ஸ்பைஸஜெட்டின் தலைவராக மாறன் பொறுப்பேற்றுள்ளார். இதனை மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முறைப்படி இன்று அறிவித்தது.
இயக்குநர் குழுவில், சார்பு இயக்குநராக கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறனும் இணைந்துள்ளார்.
நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மில்ஸ் என்பவரை நியமித்துள்ளார் கலாநிதி மாறன்.
இந்திய வரலாற்றில் தமிழக தொழிலதிபர் ஒருவர் நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸின் உரிமையாளர் மற்றும் தலைவராக இருப்பது இதுவே முதல்முறை.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தை மின்னல் தாக்கியது

Written on 1:31 AM by பூபாலன்(BOOBALAN)

தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில், ஒரு கலசம் முற்றிலும் சிதைந்து விழுந்தது. தஞ்சையில் நேற்று காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. மிக அமைதியாக பெய்த மழையில், மாலை 4.30 மணிக்கு ஒரே ஒரு பலத்த மின்னலும், அதைத் தொடர்ந்து கடும் இடியும் விழுந்தது.

அப்போது, தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நான்கு கோபுரத்தில் உள்ளிருந்து வெளியே வரும்போது இரண்டாவதாக உள்ள ராஜராஜன் நுழைவு வாயில் கோபுரம் பாதிக்கப்பட்டது. இக்கோபுரத்தில், ஒரு கலசம் முற்றிலும் சிதைந்து கீழே விழுந்தது. முற்றிலும் சிதைந்து கீழே விழுந்த கலசத்தை உடனடியாக கோவில் ஊழியர்கள் அகற்றினர்.

ஆயிரம் ஆண்டு கடந்த பெரிய கோவிலில் இதுவரை இல்லாமல் தற்போது விழுந்த இடி தாக்குதலை பக்தர்கள் அபசகுனமாக எண்ணுகின்றனர். மிகவும் கவலையுடன் பலரும் வருந்தினர். கடந்த செப்டம்பர் 22ம் தேதி தஞ்சையில் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா துவங்கியது.

துவங்குவதற்கு முதல் நாள் செப்டம்பர் 21ம் தேதி காலை பெய்த பலத்த மழையில், தஞ்சை அரண்மனையில் உள்ள ஆயுத கோபுரத்தில் பலத்த இடி விழுந்து கோபுரம் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்து எரிமலை வெடித்துச் சிதறிய போது எடுக்கப்பட்ட தத்ரூபமான படங்கள்! (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Written on 3:58 AM by பூபாலன்(BOOBALAN)

ஐஸ்லாந்தில் உள்ள இபலஜோகுல் எரிமலை கடந்த மார்ச் மாதத்தில் வெடித்துச் சிதறியது.

இது மக்களால் பாரிய அளவில் அறியப்பட்ட ஒரு எரிமலையல்ல இருந்தாலும் அது மார்ச் மாதத்தில் மூர்க்கமாக வெடித்தது.

இந்தப் பிரதேசத்தில் சுறுறுலாப் பயணம் மற்றும் விமான சேவைகள் என்பனவும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

ஐஸ்லாந்தின் படப்பிடிப்பாளர் றக்னார் சிகுட்ஸன் இந்தக் காட்சியை தத்ரூபமாகப் படம் பிடித்துள்ளார்.


எரிமலை வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த போது அதிலிருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் துகள்கள் என்பனவற்றைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேலாக விமானத்தில் பறந்து சென்று இந்தக் காட்சிகளைத் தத்ரூபமாகப் படமெடுத்துள்ளார்.

52 வயதான இந்தப் படப்பிடிப்பாளர் சுமார் 10, 000 படங்களை எரிமலைக்கு மேலாகப் பறந்தவாறே எடுத்துள்ளார். இந்தப் படங்கள் இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயிலில் பரபரப்பு பெண்கள் பெட்டியில் ஏறிய ஆண்களுக்கு சரமாரி அடி ஆண்களை பிடித்து தோப்புக்கரணம் போட வைத்தனர்

Written on 1:32 AM by பூபாலன்(BOOBALAN)




குர்கான்: மெட்ரோ ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிய ஆண்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் வித்தியாசமான தண்டனை அளித்தனர். மெட்ரோ ரயில்களில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் பயணிக்க வேண்டிய நிலை இருந்தன.

தங்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஒதுக்க வேண்டும் என்று பெண்கள் கோரி வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் மகளிர் தினத்தின்போது மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு என்று தனி பெட்டி ஒதுக்கப்பட்டது.


பிரிட்டனில் 17 ஆண்டுகளுக்குப் பின் சாலைகளை மூடிய பனி (படங்கள் இணைப்பு)

Written on 10:45 PM by பூபாலன்(BOOBALAN)






17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரிட்டனில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், மரங்கள், பாடசாலைகள் , வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகிறது.

இதனால் பல சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும் , மக்களும், பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்களும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தற்போது அண்ணளவாக அனைத்து சாலைகளிலும் ஆறு அங்குலம் அளவிற்கு பனி படர்ந்து காணப்படுகிறது.

பறக்கும் பாம்பு ஆச்சரியக் காணொளி

Written on 10:06 PM by பூபாலன்(BOOBALAN)

பறக்கும் பாம்பினங்கள் எப்படி பறக்கின்றன, என்ற ஆச்சரியத் தகவலை இந்தக் காணொளி தருகின்றது. பறக்கும் பல்லி வகைகள், பறக்கும் அணில் பயன்படுத்தும் பறக்கும் முறைகளைக் காட்டிலும், பறக்கும் பாம்புகள் தானே மேல் எழுந்து பறக்கின்றன. இதனைப் பார்க்கும் போது ஆச்சரியமாக மட்டுமில்லாமல் அச்சத்தையும் உண்டு பண்ணுகிறது.

Written on 6:08 AM by பூபாலன்(BOOBALAN)

சி.என். அண்ணாதுரை

Written on 5:21 AM by பூபாலன்(BOOBALAN)

காஞ்சிபுரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சி.என். அண்ணாதுரை, தமிழகமே வியந்து போற்றுகின்ற தலைவர் அண்ணாவாக வளர்ந்ததும்; ஒரு அரசியல் கட்சியைத் துவக்கி பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்ததும், வரலாற்றில் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய முக்கிய நிகழ்வுகளே.

Karunanidhi and Annaduraiஅண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் கடந்தகால வரலாற்றை அசைபோடுவது தேவையானது. அவர் மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல, மக்களின் நாடித் துடிப்புகளையும், நாட்டின் நடப்புகளையும் மிகச் சரியாக கணித்து சரியான நேரத்தில் சரியான கோஷங்களை முன்வைத்து வெற்றிப் பாதையில் தமது இயக்கத்தை பயணிக்கச் செய்த தலைவருமாவார்.

சரித்திரம் படைத்தவர்களின் அன்றைய முகங்கள் !!!!

Written on 2:59 AM by பூபாலன்(BOOBALAN)

முப்பெரும் முதல்வர்கள் திரு .சி.என். அண்ணாதுரை,திரு.மு.கருணாநிதி,திரு.எம்.ஜி.ராமசந்திரன்


கலைஞர் கருணாநிதியுடன் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.


நாவலர் நெடுஞ்செழியனுடன் திரு.மு.கருணாநிதி,திரு.எம்.ஜி.ராமசந்திரன்


கலைவாணர் சிலை திறப்பு விழாவில் திரு .சி.என். அண்ணாதுரை,திரு.மு.கருணாநிதி,திரு.எம்.ஜி.ராமசந்திரன்


கூவம் மேம்பாட்டு திட்ட விழாவில் திரு .சி.என். அண்ணாதுரை,திரு.மு.கருணாநிதி



திரு .சி.என். அண்ணாதுரை,திரு.எம்.ஜி.ராமசந்திரன்




எம்.ஜி.ஆருடன் ,ஜானகி ராமசந்திரன்

நாடு முழுவதும் தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடியோ ஒலி-ஒளிபரப்புகள் நிறுத்தம்

Written on 2:14 AM by பூபாலன்(BOOBALAN)

நாடு முழுவதும் தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடியோ ஆகியவற்றின் ஒலி-ஒளிபரப்புகள் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரசார் பாரதி அமைப்பை கலைத்துவிட்டு, தூர்தர்ஷன் மற்றும் ஆல் இண்டிய ரேடியோவை மீண்டும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு மாற்றக் கோரியும், தங்களை மீண்டும் அரசுப் பணியாளர்களாக மாற்றக் கோரியும் பிரசார் பாரதி பணியாளர்கள் இன்று காலை முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்று காலை 9 மணி முதல் தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடியோ பணியாளர்கள் ஒலி-ஒளிபரப்பை முடக்கியுள்ளனர். இதனால் நாடு முழுவதுமே இந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முருங்கைக்கீரையும் உடல்நலமும்..

Written on 10:25 PM by பூபாலன்(BOOBALAN)

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ , முருங்கைக்கீரை இவை இரண்டும் அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள  சத்துக்கள் நிறைய...


சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.  

முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். 

கேப்டன் விஜயகாந்த் இனி டாக்டர் விஜயகாந்த்

Written on 10:03 PM by பூபாலன்(BOOBALAN)


இந்திய அபோஸ்தல கிறிஸ்தவ பேராயர்களின் திருச்சபை டிசம்பர் 3ம் தேதி விஜயகாந்துக்கு சென்னையில் நடக்கும் விழாவில் டாக்டர் பட்டம் வழங்குகிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் எஸ்.எம். ஜெயகுமார் தலைமையில் ஜான் வில்லியம்ஸ் இந்த விருதினை வழங்குகிறார்.


இந்த அறிவிப்பு நேற்று நடந்த விஜயகாந்த் நடித்து இயக்கிய விருதகிரி பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

நமது தேசத்தின் சில அவலங்கள் சில ...

Written on 11:01 PM by பூபாலன்(BOOBALAN)


1.  அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
4. பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

Written on 10:34 PM by பூபாலன்(BOOBALAN)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2, 668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை 20 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது.

நூறு அடி கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தை சிறு காயங்களுடன் மீண்ட அதிசயம்! (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

Written on 2:11 AM by பூபாலன்(BOOBALAN)

ஆர்ஜன்டீனாவில் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ்ஸுக்கு அருகில் பிளாரஸ் பகுதியில் மூன்று வயது குழந்தையொன்று 100 அடி ஆழமான தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் வீழ்ந்தது.


வெனசா மமானி என்ற இந்தக் குழந்தை வீழ்ந்த கிணறு விவசாயிகளால் பாவிக்கப்படும் 14 அங்குலங்கள் மட்டுமே அகலமான கிணறாகும்.

அழகிரி-ஸ்டாலினும், தி.மு.க.வும் கருணாநிதிக்கு 2 மிகப்பெரிய சொத்துக்கள்'' நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

Written on 10:59 PM by பூபாலன்(BOOBALAN)

முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தி.மு.க.வும், அழகிரி-ஸ்டாலினும் 2 மிகப்பெரிய சொத்துகள்' என்று, நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

மத்திய மந்திரி மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி-அனுஷா திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

அழகிரி மகன் திருமண அசத்தல் ஆல்பம்

Written on 9:41 PM by பூபாலன்(BOOBALAN)






மின்காந்த அலைகள் மூலம் மூளையைத் தூண்டுதல்

Written on 4:49 AM by பூபாலன்(BOOBALAN)


லண்டன்: மின்காந்த அலைகளைக் கொண்டு மூளையின் செயல்பாட்டை சீராக்க முடியும் என்பது மருத்துவ ஆராய்ச்சியின் சமீபத்திய கண்டுபிடிப்பு. மனிதர்களின் அனைத்து செயல்களையும் நிர்ணயம் செய்வது மூளைதான். அதுதான் நமக்கு எஜமான்.

மூளையின் கட்டளைக்கு ஏற்பதான் உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. மூளையில் ரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் குழுவினர் சோகன் கந்தோஷ் தலைமையில் மூளையின் செயல்பாடு மற்றும் குறைபாடுகளை களைவது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினர்.

நாய்கள் வாலாட்டுவது நன்றிக்காக அல்ல; மகிழ்ச்சிக்காக!

Written on 2:00 AM by பூபாலன்(BOOBALAN)

நாய் நன்றியுள்ள பிராணி. நாம் உணவிட்டால் நன்றியுடன் வாலாட்டும், வீட்டைப் பாதுகாக்கும் என்று கூறி வருகிறோம். நாய் வாலாட்டுவது குறித்து ஒரு ஆராய்ச்சி நடந்தது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… நாய்கள் வாலாட்டுவது (நன்றிக்காக அல்ல) மகிழ்ச்சிக்காக. அதுவும் எந்த திசையில் வாலாட்டுகிறது என்பதில்தான் விஷயமே உள்ளது. நாய்கள் இடது பக்கமாக வாலாட்டினால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம். 56 சதவீத நாய்கள் இப்படித்தான் வாலாட்டுகிறதாம்.

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்

Written on 10:56 PM by பூபாலன்(BOOBALAN)

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.
Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது.

தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடமாட்டேன் : விஜயகாந்த் சபதம்

Written on 10:30 PM by பூபாலன்(BOOBALAN)

http://img.dinamalar.com/data/large/large_128608.jpg
காஞ்சிபுரம் : ""கூட்டணி குறித்து பேச அவசரமில்லை. தேர்தலின் போது பேசிக் கொள்வோம். ஆனால், தி.மு.க.,வை அடுத்த முறை ஆட்சிக்கு வர விடமாட்டேன்,''  என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

நோயைத் தீர்க்க உதவும் `தட்டச்சு’!

Written on 10:17 PM by பூபாலன்(BOOBALAN)

ஆபத்துக் காலங்களில் சிலருக்கு பேசவே வராது. நாக்கு குளறுபடி செய்யும். காக்காய் வலிப்பு, முடக்குவாதம் மற்றும் கோமா நிலையை அடைந்தவர்கள் இத்தகைய பாதிப்படைவதில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் நிலையை கண்டறிய பல்வேறு உபகரணங்கள் இருந்தாலும் தற்போது புதிதாக வந்துள்ளது தட்டச்சு முறை. இது நோயாளிகளின் நினைவுகளை கணினியில் தட்டச்சு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேண்டாம் அசைவம்!

Written on 10:12 PM by பூபாலன்(BOOBALAN)


சைவம் கூடாது என்று வலியுறுத்தியுள்ள வேதாத்திரி மகரிஷி, மாமிசம் உண்பதை ஏன் நிறுத்த வேண்டும்? என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார் : “மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய திறமை இல்லாததால்
அவை எல்லாம் பிற உயிர்களைக் கொன்று, உடலை உண்டு வாழ்கின்றன.

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்.

Written on 10:09 PM by பூபாலன்(BOOBALAN)

கனடா நாட்டில் கன்கார்டியா பல்கலை கழகம் ஒரு விசித்திர ஆராய்ச்சியை மேற்கொண்டது. மனிதர்களின் கைவிரல் நீளத்திற்கும் அவர்களது தன்மை மற்றும் குணாதிசயங்களுக்கும் தொடர்பு உண்டா என்பது தான் அந்த ஆராய்ச்சி . 415 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது ஆள்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்குமுள்ள உயர வித்தியாசங்கள் கணக்கிடப்பட்டது.

அமைச்சர் லஞ்சமாக கேட்டார் ரூ.15 கோடி: தொழிலதிபர் டாடா பரபரப்பு

Written on 9:18 PM by பூபாலன்(BOOBALAN)

டேராடூன் : "புதிதாக விமான சேவை துவங்க திட்டமிட்ட தன்னிடம், அமைச்சர் ஒருவர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக' தொழிலதிபர் ரத்தன் டாடா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டில்லியில், "21ம் நூற்றாண்டில் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், டாடா குரூப் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா பங்கேற்று சிறப்புரையாற்றினார். தனது வெற்றி குறித்தும், கடைபிடித்த நெறிமுறைகள், கோட்பாடு என பலவற்றையும் விளக்கி, எப்படி சாதிக்க முடிந்தது என முழு வரலாற்றையும் சொல்லிக் கொண்டு வந்தவர்... விமானப் போக்குவரத்தை முதன் முதலாக நடத்திய டாடா நிறுவனத்தால் மீண்டும் அந்த துறையில் நுழைய முடியவில்லை; தோல்வி தான் ஏற்பட்டது என்று கூறி அதிர்வலைகள் ஏற்படுத்தினார்.

டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து: எண்ணிக்கை 64 ஆக உயர்வு - 80 பேர் காயம்

Written on 9:17 PM by பூபாலன்(BOOBALAN)

டெல்லி கிழக்கு பகுதியில் இருக்கும் லட்சுமி நகரில் உள்ள லலலிதா பார்க் எனும் இடத்தில் நேற்றிரவு 8.15 மணிக்கு 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் அடித்தளம் முதலில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

அதன் மீது 5 மாடிகளும் சரிந்து விழுந்து நொறுங்கி சிதறின. கட்டிடம் இடிந்து விழுந்த பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். கண் இமைக்கும் நேரத்துக்குள் 5 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் உதவி கோரி அலறினார்கள்.

FeedBurner FeedCount

top

Back to Top
free counters

wibiya widget

Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket